"கடுமையான தண்டனை கிடைக்கணும்".. நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவையே உலுக்கியுள்ள ஷ்ரத்தா வழக்கில் கொலையாளிக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை டெல்லி போலீஸ் உறுதி செய்யும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
Also Read | ஜாம்பவான் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்.. மேட்ச் முடிஞ்சதும் வீரர்கள் செஞ்ச அடடே காரியம்.. FIFA பாராட்டு..!
டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார். அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனன்ஷிப்பி இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடிக்கடி காதலியுடன் சண்டை போட்டு வந்ததன் பெயரில் கடும் ஆத்திரத்தில் இருந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது.
தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர். கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை என்பதால் சந்தேகத்தில் போலீசிடம் புகாரளிக்க, அஃப்தாப் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,"ஷ்ரத்தா வாக்கரைக் கொன்றவர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் கடுமையான தண்டனை கிடைப்பதை டெல்லி காவல்துறை உறுதி செய்யும்" என்றார்.
இதனிடையே, நேற்று அஃப்தாப்பிற்கு பாலிகிராஃப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அவரது மனநிலை, உளவியல் சமநிலை பற்றி அறிந்துகொள்ள ரோஹிணி ஆய்வகத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார் அஃப்தாப். விசாரணையை குழப்பும் விதமாக அஃப்தாப் தகவல்களை கூறிய நிலையில் அவருக்கு பாலிகிராஃப் பரிசோதனை மற்றும் நார்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக காவல்துறையினர் சொல்லியிருக்கும் நிலையில் விசாரணை தொடர்ந்து வருகிறது.
மற்ற செய்திகள்