கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு... தடுப்பூசி வழிமுறைகள்!.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா நோய் தொற்று மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து முக்கியமான அறிவிப்புளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு... தடுப்பூசி வழிமுறைகள்!.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா 2வது அலை இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும் பெருத்த உயிர்ச்சேதங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

முதல் டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு அடுத்த டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வேறு பாதிப்புக்கு தீவிர சிகிச்சை பெறுபவர்கள் நான்கு வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதத்திற்கு பிறகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 18,58,09,302 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4,22,25,400 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் இடைவெளிக்கான காலத்தையும் நீட்டித்தது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்