ஏர் இந்தியா வெற்றிகரம்.. இனி எல்ஐசி தான்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுடெல்லி : எல்ஐசி வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்பது பற்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையில் பேசியுள்ளார்.

ஏர் இந்தியா வெற்றிகரம்.. இனி எல்ஐசி தான்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரசு என்பது, அரசாங்கம் தான் நடத்த வேண்டுமே தவிர, தொழில் நடத்தக் கூடாது என்பது பாஜக அரசின் கொள்கையாக உள்ளது. அதன்படி, லாபத்தில் இயங்கும், நஷ்டத்தில் இயங்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலுள்ள பல விமான நிலையங்கள் பராமரிப்பு தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அதே போல, கடும் நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை, லாபத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைக்கும் பணியும் நடந்தது.  இதேபோல் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை  தனியாரிடம் கொடுத்து விட்டனர். டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு விற்றுவிட்டது.

மத்திய அரசு பட்ஜெட்

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் அதிக லாபத்தை ஈட்டும் எல்ஐசி வங்கியின் பங்கு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்றைய மத்திய அரசு படஜெட் தாக்கலின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி-யில், பங்கு விற்பனை விரைவில் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவால், நிறைய முதலீடுகள் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், அதே வேளையில், பல்வேறு அரசியில் கட்சிகள், வங்கி ஊழியர்கள்  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் நஷ்டம் அடைந்த நேரத்தில் அதை காப்பாற்றியது எல்ஐசி தான் . அப்படி இருக்கும் நிலையில், தற்போது மிக அபரிதமான லாபத்தில் இருககும் எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு போனால் அது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

UNIPON BUDGET 2022, NIRMALA SITHARAMAN, LIC, எல்ஐசி, நிர்மலா சீதாராமன்

மற்ற செய்திகள்