"நல்லா இரு.. வேலைக்கு போற ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்கோ"..வாட்சாப் மூலம் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கணவன் எடுத்த பகீர் முடிவு.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | ‘இவர் இப்படி கோவப்பட்டு பார்த்ததே இல்லயே’.. தமிழக வீரரை கடுமையாக சாடிய கேப்டன்.. அப்படி என்ன நடந்தது..?
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் பிஜாடே. பிடெக் பட்டதாரியான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சமோட்டோ தில்வாரி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தற்போது 35 வயதான சதீஷ் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மனைவி தில்வாரி வனத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
விவாகரத்து
திருமணத்திற்கு பிறகு சதீஷ் - தில்வாரி தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே நேற்று தில்வாரி வழக்கம்போல வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். ஏற்கனவே வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த சதீஷ் விவாகரத்து பெற விண்ணப்பித்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தனது மனைவிக்கு வாட்சாப் மூலமாக குறுஞ்செய்தி ஒன்றினை சதீஷ் அனுப்பி இருக்கிறார். அதில் "நான் போகிறேன். நீ நன்றாக இரு. வேலைக்குச் செல்கிற வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்" என்று சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
பதறிய மனைவி
சதீஷின் மெசேஜை படித்துவிட்டு தில்வாரி பதறிப்போய் அவருக்கு போன் செய்து இருக்கிறார். ஆனால் சதீஷ் அந்த அழைப்பை ஏற்கவில்லை. இதனையடுத்து காவல்துறைக்கு தில்வாரி இது குறித்து தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சதீஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.
மேலும் இரண்டு பக்க உருக்கமான கடிதம் ஒன்றினையும் சதீஷ் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த நபர் தனது மனைவிக்கு வாட்சாப் மூலம் மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மற்ற செய்திகள்