பசங்க நல்ல படியா 'படிக்கணும்'... அது தான் என்னோட 'டார்கெட்'... வருங்கால 'மாஸ்டர்'களுக்கு வேண்டி 'மாஸ்' காட்டிய 'டீச்சர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் கற்பிக்க டிஜிட்டல் முறையை தேர்வு செய்தனர்.

பசங்க நல்ல படியா 'படிக்கணும்'... அது தான் என்னோட 'டார்கெட்'... வருங்கால 'மாஸ்டர்'களுக்கு வேண்டி 'மாஸ்' காட்டிய 'டீச்சர்'!

இதனையடுத்து, ஆசிரியர் தங்களது வீட்டில் இருந்து பாடங்களை எடுத்து இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், புனேவை சேர்ந்த வேதியியல் ஆசிரியை மௌமீதா, தான் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் முறையை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். 'செல்போனை நிறுத்துவதற்கான ட்ரைபேட் என்னிடம் இல்லை. அதனால் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டி நானே ஒரு தீர்வை உருவாக்கியுள்ளேன்' என குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆசிரியை, ட்ரைபேட் பதிலாக ஹேங்கர் ஒன்றில் துணிகளை கட்டி அதனை நாற்காலியுடன் இணைத்து செல்போனை வைத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து பலர் அந்த டீச்சரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். கடுமையான அர்ப்பணிப்பு என்றும், மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க தன்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறி பலர் அந்த ஆசிரியையை பாராட்டி வருகின்றனர்.

வகுப்பில் இருப்பதை போன்ற உணர்வை மாணவர்களுக்கு அளித்து அவர்களை பாடம் கற்க வைப்பதே எனது இலக்கு என ஆசிரியை மௌமீதா தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்