கல்லூரி மாணவியாக நடித்து அண்டர்கவர் ஆபரேஷன்..! விஜய், அஜித் பட பாணியில் பெண் POLICE தெறி சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் ராகிங் புகாரை விசாரிக்க இளம்பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவி போல கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷாலினி சௌஹான். 24 வயதான இவர் சமீபத்தில் அங்குள்ள மகாத்மா காந்தி மெமோரியல் மெடிக்கல் காலேஜில் மாணவியாக சேர்ந்திருக்கிறார். கடந்த மூன்று மாத காலமாக மாணவி போல கல்லூரியில் வலம் வந்த ஷாலினி, ராகிங்கில் ஈடுபட்டு வந்த 11 சீனியர் மாணவர்களை அடையாளம் கண்டு கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்த 11 பேரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருகின்றனர்.
இதுகுறித்து ஷாலினி பணிபுரிந்து வரும் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் தெஹ்ஸீப் காசி பேசுகையில்,"முதலாம் ஆண்டு மாணவர்களிடமிருந்து அவ்வப்போது எங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இது குறித்து யாரும் நேரடியாக புகார் கொடுக்க முன்வரவில்லை. ஆகவே நாங்கள் கல்லூரி வளாகத்தை ஆய்வு செய்ய முடிவு எடுத்தோம். மாணவர் யாரும் துணிந்து புகார் கொடுக்க முன் வராததால் ஷாலினியை கல்லூரி மாணவி போல உள்ளே அனுப்பினோம். அவர் ஜூனியர் மாணவர்களிடத்தில் சகஜமாக பேசி அவர்களுடைய அனுபவத்தை கேட்டறிந்தார். அதன் மூலம் ராகிங்கில் ஈடுபட்டு வந்த 11 பேர் கண்டுபிடிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர்" என்றார்.
இது பற்றி பேசிய ஷாலினி,"இது புது அனுபவமாக இருந்தது. நான் தினமும் மாணவி போல கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன். அங்குள்ள உணவகத்தில் சக மாணவர்களுடன் பேசுவேன். நான் என்னைப் பற்றி அவர்களிடத்தில் அறிமுகம் செய்து கொள்வேன். அப்போது அந்த மாணவர்களும் தங்களைப் பற்றி பேச துவங்குவார்கள். இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது" என்றார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ராகிங்கில் ஈடுபட்டு வந்த சீனியர் மாணவர்களை அடையாளம் கண்டறிய போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவி வேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை பிடித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | தங்கச்சிக்கு கல்யாணம்.. பாசமாக வளர்த்த காளையை பரிசாக கொடுத்த அண்ணன்.. நெகிழ்ச்சி வீடியோ..!
மற்ற செய்திகள்