'தென்னிந்திய மாநிலங்களில்...' 'இங்கெல்லாம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவிட்டாங்க...' ஐ. நா கடும் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஊடுருவி உள்ளதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா.வின் பகுப்பாய்வு ஆதரவு, தடைகள் கண்காணிப்பு குழு தீவிரவாத அமைப்புகளான ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற படைகள் கண்காணிக்கும் பணியில் இருக்கிறது. இந்த குழு வெளியிட்டுள்ள 26-வது அறிக்கையில், தாலிபன் அமைப்பின் கீழ் இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா செயல்படுவதாகவும், அதில் வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தானை சேர்ந்த 150 முதல் 200 பேர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவ்வறிக்கையில், இந்திய துணை கண்டத்துக்காக அல்கொய்தா தலைவராக ஒசாமா மகமது செயல்படுவதாக கூறுகின்றனர். இந்த குழுவானது, முன்னாள் தலைவர் ஆசிம் உமரின் படுகொலைக்கு பதிலடி கொடுக்க இப்பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் விலயா ஆப் ஹிந்தில் 180 முதல் 200 பேர் செயல்பட்டு வருவதாகவும், அவர்களில் கணிசமானோர் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்திய மற்றும் அம்மாநில மக்களிடையேயும் அரசிடையேயும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்