'இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்'... 'கொரோனா 3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாடு'... இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரவி குப்தா அரசின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

'இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்'... 'கொரோனா 3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாடு'... இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை!

இங்கிலாந்து, கொரோனா வைரஸ் 3வது அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா அரசின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

UK in early stages of Covid third wave

இவர் இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா வைரஸ் 3 வது அலையின் பாதிப்பில் இருப்பதாகவும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசி பேரின் உடலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேநேரத்தில் புதிய பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேக வளர்ச்சியை தூண்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிச்சயமாக பாதிப்பு எண்ணிக்கை இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. எல்லா அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளின் பின்னணியில் தொடங்கி பின்னர் வெடிப்பாக மாறுகின்றன. எனவே இங்கே முக்கியமானது என்னவென்றால் நாம் இங்கே பார்ப்பது 3-வது அலையின் ஆரம்ப அறிகுறிகளை தான்.

UK in early stages of Covid third wave

எனவே பிரதமர் போரிஸ் ஜூன் 21-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை சில வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும்'' எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்