#Covid19: கல்லூரிகள் திறக்கப்பட்டால், ‘விடுதி மாணவர்களுக்கு முதல் ரூலே இதுதான்’.. யுஜிசி ‘அதிரடி’!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் வருகின்ற 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டால், கொரோனா தற்காப்பு காரணங்களுக்காக, விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு நிபந்தனை விதித்துள்ளது.
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வழங்கிய பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும், அவ்வாறு திறக்கும்போது விடுதி மாணவர்கள் கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வந்தாலும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் உயர்கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன.
மற்ற செய்திகள்