'எங்களுக்கு வேற ஆப்ஷன் இல்ல'... '600 பேரை வீட்டிற்கு அனுப்பிய பிரபல நிறுவனம்'... ஆனா இந்த உதவிய மட்டும் பண்றோம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு காரணமாக 600 ஊழியர்களை ஊபர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. வேலையிழந்தவர்களுக்கு சில சலுகைகளையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேகாரணமாகப் பொருளாதாரம் அடியோடு முடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நெருக்கடியான சூழ்நிலையைக் கையாள வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில் டாக்ஸி நிறுவனங்களான ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளது. இதன் காரணமாக ஊபர் நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் வேலைப்பாடுகளை 25 சதவீதம் குறைத்துள்ளது.
இதற்கிடையே வேலையிலிருந்து அனுப்பப்படும் ஊழியர்களுக்கு சில சலுகைகளை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 10 முதல் 12 வாரங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் எனவும், 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அந்த ஊழியர்களுக்கு வெளிப்புற ஆதரவைப் பெற்றுத் தருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும் ஊபர் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்