“கண்டிப்பா Pick Up பண்ண வந்துருவீங்க தானே?”.. கஸ்டமரின் கேள்விக்கு Cab டிரைவர் சொன்ன ‘செம’ வைரல் பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு Uber கார் டிரைவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரிஷ்மா மேஹ்ரோத்ரா என்ற பெண், Uber கார் டிரைவர் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கடந்த மே 15-ம் தேதி Uber ஆப் மூலம் கார் ஒன்றை அப்பெண் புக் செய்துள்ளார். புக் செய்த உடன் சம்பந்தப்பட்ட கார் டிரைவருக்கு மேசேஜ் செய்த கரிஷ்மா மேஹ்ரோத்ரா, ‘நீங்கள் நிச்சயம் வந்து பிக் அப் செய்து கொள்வீர்கள் தானே?’ என கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த Uber கார் டிரைவர், ‘நிச்சயம் வருவேன். நான் இப்போது பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் பாதி மிச்சம் இருக்கிறது. சாப்பிட்டுவிட்டு நிச்சயம் வந்து பிக் செய்கிறேன்’ என பதில் அளித்துள்ளார். இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை கரிஷ்மா மேஹ்ரோத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அந்த கார் டிரைவரின் நேர்மையை பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் OLA மற்றும் Uber நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் சில குற்றச்சாட்டுகளை வைத்தனர். அந்நிறுவனங்களின் கேன்சலேஷன் கொள்கை வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாமல் பெனால்டி தொகை கட்டும் சூழலை உருவாக்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
This is the type of honesty i hope to achieve in life pic.twitter.com/xi62yZak8v
— Karishma Mehrotra (@karishma__m__) May 15, 2022
இதனை அடுத்து இந்த இரு நிறுவனங்களும் இந்த புகார் தொடர்பான குறைகளை சீரமைத்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் நுகர்வோர் விவகாரங்கள் செயலாளர் ரோஹித் குமார் சிங் அறிவுறுத்தியிருந்தார். இந்த சூழலில் Uber கார் டிரைவர் ஒருவர் பெண் வாடிக்கையாளரிடம் நேர்மையாக நடந்துகொண்டது வரவேற்பை பெற்று வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்