வருமான வரி செலுத்த போறீங்களா? பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, சட்டம் வரி செலுத்துவோர் தங்கள் சரியான ஐடிஆர் தாக்கல் செய்ய மதிப்பீட்டு ஆண்டு முடிவில் இருந்து இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட இருக்கிறது.

வருமான வரி செலுத்த போறீங்களா? பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் இனி இ-பாஸ்போர்ட்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. எப்படி இருக்கும்.. விவரம்

மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல்:

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல்:

இந்த நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது, வருமான வரி குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில், தனிப்பட்ட வரி செலுத்துவோர், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது வருமானத்தை அறிவிக்கத் தவறினால், அவர்கள் புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Two years from the end of the assessment year to file an IDR

ஐடிஆர் தாக்கல்:

தற்போது, நிதியாண்டில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து யாரேனும் சம்பாதித்த வருமானத்தின் சரியான படத்தை வழங்குவதற்காக, தனிநபர் தனது ஐடிஆரைப் புதுப்பிக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளித்தது. இந்நிலையில், புதிய அறிவிப்பின்படி, சட்டம் வரி செலுத்துவோர் தங்கள் சரியான ஐடிஆர் தாக்கல் செய்ய மதிப்பீட்டு ஆண்டு முடிவில் இருந்து இரண்டு வருடங்கள் அவகாசம் அளிக்கப்பட உள்ளது.

Two years from the end of the assessment year to file an ITR

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பு:

அதேப்போன்று, மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய அமைப்பு கணக்கில் உள்ள முதலாளியின் பங்களிப்பில் வரி விலக்கு வரம்பை 14 சதவீதமாக அதிகரிக்கவும் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணத்தில் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைப்பதாகவும் அறிவித்துள்ளார்.அப்பொழுது, ஜிஎஸ்டி வசூலுக்கான ஆரோக்கியமான ஒன்றாக இதைக் கருதலாம் எனவும், 2022 ஜனவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா வெற்றிகரம்.. இனி எல்ஐசி தான்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ASSESSMENT YEAR, IDR, END OF THE ASSESSMENT YEAR, ஐடிஆர் தாக்கல், வருமான வரி, பட்ஜெட், பட்ஜெட் தாக்கல்

மற்ற செய்திகள்