'நீ செஞ்ச வேலைக்கு'.. 'வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது'.. பதற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாளை மாடு ஒன்று தெருவில் இறங்கி திமிறிக்கொண்டு ஓடி மனிதர்களை பதைபதைப்புக்குள்ளாக்கியதோடு, அனைவரையும் மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது.
காளைகளை அடக்கும் அளவுக்கு வீரர்கள் இருந்தாலும் கூட, அவர்கள் தினமும் பயிற்சி பெற்ற பின்பே ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் கூட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு காளைகளை அடக்குவார்கள். அப்படி காளைகளுடன் மோதும் இளைஞர்களை காளையர்கள் என்று சொல்லி புகழுவது கூட உண்டு.
ஆனால் எவ்வித பயிற்சியும் இருந்திடாத பொது ஜனத்தின் மத்தியில் திடீரென காளை மாடு ஒன்று ஓடிவந்தால், அது யாரை என்ன செய்யும் என்றே தெரியாது. அதனால்தான் அதன் பேர் அவிழ்த்துவிட்ட காளை என்று சொல்கின்றனர். அந்த அளவுக்கு எதிரில் இருப்பவர்களின் மீது முற்றிலு இரக்கமில்லாமல் குத்திக் கிழித்துவிடும்.
அப்படித்தான் குஜராத்தின் முக்கிய வீதி ஒன்றில் ஓடிவந்த காளை மாடு, அங்கிருந்தவர்களை மிரளச் செய்ததோடு , சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் முட்டியதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் ஓடிவந்த இந்த காளை 2 பேரை முட்டி மோதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய பிறகு, கோசாலையில் பிடித்திழுத்துக்கொண்டு கட்டப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH Gujarat: Two people injured after being attacked by a bull near Rajkot yesterday. The bull was later shifted to a cowshed. pic.twitter.com/hUmKHDafX9
— ANI (@ANI) June 19, 2019