'திருமணம் முடிந்ததும் கணவர்களை பிரிய வேண்டிய சூழல்'... '2 ஆண்டுகளாக தவித்த மனைவிகள்'... ஒருவழியாக நிறைவேறிய ஆசை!
முகப்பு > செய்திகள் > இந்தியா2 ஆண்டு காத்திருப்புக்குப் பின் தங்கள் கணவர்களோடு இணைத்துள்ளார்கள் இரண்டு இளம்பெண்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வார் என்ற இளம்பெண்ணை ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞர் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதேபோல், நேபால் சிங் பாட்டி என்பவரும் கைலாஷ் பாயும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்குத் திருமணம் முடிந்த நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடைபெற்று இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவியது. அதனால் எல்லை தாண்டி செல்வது சட்டரீதியாகவும் சிக்கலானது. இதனால் மணமகள் இருவருமே பாகிஸ்தானிலேயே தங்கினர்.
நிலைமை சரியாகும் என காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது இந்தியா வருவதற்கான வழிமுறைகள் முடிக்கப்பட்டு இருவரும் தங்களது கணவர்களைச் சந்தித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வார் , “திருமணம் முடிந்தவுடன் நான் பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டேன்.விசா நிராகரிக்கப்பட்டது. என் பெற்றோர் என்னுடைய எதிர்காலம் குறித்து கவலை அடைந்தனர். ஆனால் தற்போது நான் இந்தியா வந்துள்ளேன். திருமணம் ஆனதையே இப்போதுதான் உணர்கிறேன். இந்தியா வந்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
மணமகன் மகேந்திர சிங் கூறுகையில், ''எங்களுக்குத் திருமணம் முடிந்து 3 மாதங்கள் பாகிஸ்தானில் இருந்தேன். ஆனால் மனைவியை இந்தியா அழைத்துவர முடியவில்லை. பல நடவடிக்கைகளுக்குப் பின் தற்போது மனைவியை இந்தியா அழைத்து வந்துள்ளேன். இது தான் எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள் என'' நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்