'அவரு மேல இடிச்சிட கூடாதேன்னு...' 'திடீர்னு கார திருப்பினப்போ...' 'ஒரே செகண்ட்ல எல்லாம் முடிஞ்சு போச்சு...' - ஒரே நாளில் 'மிஸ் கேரளா' ஆன அழகிகளின் சோக முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமிஸ் கேரளா பட்டம் வென்ற இரு இளம்பெண்கள் சாலை விபத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் பெற்றவர் அன்சி கபீர், இரண்டாவது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.

நண்பர்களான அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் இருவருமே எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 1-மணி அளவில் எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை அன்சி கபீர் ஓட்டினார். அவர்களுடன் மேலும் இரண்டு நண்பர்கள் இருந்தனர். சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதும் நிலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் மோதாமலிருக்க, அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் தாங்கள் சென்ற வாகனத்தை திடீரென்று திருப்ப, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த நிகழ்வில் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அதோடு, அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் இருவரது சடலங்களும் எர்ணாகுளம் மருத்துமனையில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்

