‘10 நாட்களாக’... ‘தனிமையாக்கப்பட்ட வைர இளவரசி’... ‘காப்பாற்ற கோரிய நிலையில்’... ‘இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2 வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில், இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

‘10 நாட்களாக’... ‘தனிமையாக்கப்பட்ட வைர இளவரசி’... ‘காப்பாற்ற கோரிய நிலையில்’... ‘இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு’!

ஹாங்காங்கில் இருந்து, 3,711 பேருடன் ஜப்பான் சென்ற 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் பயத்தால், ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகம் அருகே கடந்த 3-ம் தேதி நிறுத்தப்பட்டது.  அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், கொரோனா பரவாமல் இருக்க பிப்ரவரி 19-ம் தேதி வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் தெரிவித்திருந்தது.

அந்த கப்பலில் 6 தமிழர்கள் உள்பட 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் சிக்கியிருந்தனர். கொரோனா பரவிடுமோ என்று பயமாக உள்ளதால், தங்களை உடனடியாக விரைந்து காப்பாற்றுமாறு இந்தியர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், 2 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

முதலில் ஒருவருக்கு மட்டுமே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, 10 நாட்களில் மெல்ல மெல்ல பரவி, இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 இந்தியர்கள் உள்பட கப்பலில் உள்ள 174 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்படுவது வேதனையளிக்கிறது.

CORONAVIRUS, INDIAN, SHIP, AFFECTED, INFECTION, POSITIVE RESULTS