‘இது எங்க ரூல்ஸுக்கு எதிராக இருக்கு’!.. ரோஹித் ட்வீட்டை மேற்கோளிட்டு கங்கனா பதிவிட்ட சர்ச்சை பதிவு.. டுவிட்டர் நிறுவனம் அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விவசாயிகள் போராட்டம் குறித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் சர்ச்சைக்குரிய டுவீட்களை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

‘இது எங்க ரூல்ஸுக்கு எதிராக இருக்கு’!.. ரோஹித் ட்வீட்டை மேற்கோளிட்டு கங்கனா பதிவிட்ட சர்ச்சை பதிவு.. டுவிட்டர் நிறுவனம் அதிரடி ஆக்‌ஷன்..!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், டெல்லியை சுற்றி போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹான்னா, ‘இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

Twitter deletes Kangana Ranaut tweets over rule violations

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானாவை சாடிய பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ‘டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீனக் காலனியாக மாற்ற முடியும். முட்டாள்... நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’ என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. போராடும் விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய கங்கனா ரணாவத்துக்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

Twitter deletes Kangana Ranaut tweets over rule violations

அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா பதிவிட்ட டுவிட்டர் பதிவை மேற்கோளிட்டு, ‘இந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஏன் டோபியின் அருகே நாய்களைப் போல குரைக்கிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட புரட்சிகர சட்டங்களை விவசாயிகளே ஏன் எதிர்க்கிறார்கள்?’ என கங்கனா காட்டமான பதில் பதிவிட்டுருந்தார்.

Twitter deletes Kangana Ranaut tweets over rule violations

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கங்கனாவின் இந்த பதிவு டுவிட்டர் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று அதனை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

மற்ற செய்திகள்