“பில்லி சூனியம் செஞ்சா.. பெரிய நடிகையா ஆகிடலாம்!”.. நடிகை தற்கொலையின் திகைப்பூட்டும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் 25 வயதான சேஜல் சர்மா. நடிப்பு ஆசை காரணமாக மும்பைக்கு சென்ற இவர், தானே, மிரா ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டே சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.
இதனிடையே தோ ஹாப்பி ஹை ஜி என்ற இந்தி தொடர் வடஇந்திய மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் சில விளம்பரப் படங்களிலும் நடித்த இவர், ஆஸாத் பரிந்தே என்ற வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மிரா ரோடு போலீசார், சேஜல் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதில், தனிப்பட்ட காரணத்துக்காகத் இந்த முடிவை எடுத்ததாக எழுதியிருந்துள்ளார். இதனிடையே சேஜலின் தாய் தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்ததுடன், மகளின் செல்போனையும் கொடுத்து, அதில் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க சொல்லியிருக்கிறார்.
அந்த செல்போனை வைத்து, டெல்லியைச் சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவர் விசாரிக்கப்பட்டார். அப்போது, நடிகை சேஜல் சர்மாவுக்கு மேலம் பிரபலம் ஆகி பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளதாகவும், இதை அறிந்த ஆதித்யா, பில்லி சூனியம் செய்தால் சீக்கிரம் பிரபலம் அடையலாம் என்று ஆசை காட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்தது.
இதை அறிந்த சேஜல், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆதித்யாவிடம் கடுமையாக சண்டை போட்டதுடன், அவருடனான தன் காதலையும் முறித்துக்கொண்டார். அதன் பின்னரே மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இதனை அடுத்து, நடிகை சேஜலிடம் பிரபலமாக்குவதாகக்கூறி பில்லி சூனியத்தின் பேரால் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்