‘மூச்சுத்திணறலா? திடீரென குறைந்த ஆக்ஸிஜன் அளவு!’.. சசிகலா இப்போ எப்படி இருக்கார்?.. பெங்களூரில் டிடிவி தினகரன் கூறிய தகவல் என்ன?!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து அவர் வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், சசிகலாவுக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருந்தாலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர் அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பெங்களூரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடையே பேசினார். அபோது, “சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளது. சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிடி ஸ்கேன், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்க விரும்புகிறோம். சசிகலாவின் உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்” என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்