"வானத்துலயே ரெண்டா வெடிச்சிடுச்சு".. தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானிக்கு நேர்ந்த துயரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் விமான பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று நிகழ்ந்த பயிற்சி விமான விபத்தில் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விமான பயிற்சி மையம்
ஆந்திராவின் மச்சேரலா பகுதியில் அமைந்துள்ளது அந்த தனியார் விமான பயிற்சி நிறுவனம். தெலுங்கானாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த மையத்தில் இருந்து நேற்று காலை Cessna 152 பயிற்சி விமானம் வழக்கமான பயிற்சிக்காக வெளியே கிளம்பியிருக்கிறது.
தமிழக மாணவி
இந்த விமானத்தை மஹிமா (28) என்னும் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி ஒட்டி இருக்கிறார். பயிற்சி முடித்துவிட்டு பயிற்சி மையத்திற்கு திரும்பும்போது விமானம் வெடித்துச் சிதறி இருக்கிறது. நேற்று காலை 10.28 மணிக்கு சேலக்குருத்தி, துங்கதுருத்தி கிராம எல்லைகளுக்கு இடையே ஹெலிகாப்டர் பறக்கும் பொது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், மஹிமா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெண்டா வெடிச்சிடுச்சு
துங்கதுருத்தி கிராமத்தினை சேர்ந்த சிலர் இந்த விபத்தை நேரடியாக பார்த்ததாக சொல்கின்றனர். இதுகுறித்து அந்த மக்கள் பேசும்போது, வானத்திலே மஹிமா ஒட்டி சென்ற பயிற்சி விமானம் இரண்டு பகுதிகளாக வெடித்துச் சிதறியதாகவும் ஆனால்,தீ விபத்து ஏற்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
விமானம் கீழே விழுந்த பிறகு உடனடியாக அருகில் சென்ற மக்கள், மஹிமாவை காப்பாற்ற நினைத்ததாகவும் ஆனால், அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இரங்கல்
விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்," ஆந்திர மாநிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளம் பயிற்சி விமானி உயிரிழந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நான் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தினை சேர்ந்த பெண் பயிற்சி விமானி விபத்தில் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்