'6 மணி நேரம்தான் அந்த தடயம் இருக்கும் ஆனா'... 'சுஷாந்த் மரண வழக்கில்'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக நடத்தப்பட்டது என உயர் தடயவியல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் உயர் தடயவியல் அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த்தின் பிரேத பரிசோதனை குறித்துப் பேசியுள்ள அவர், "உயிரிழந்தவருடைய உடலில் உள்ள ரசாயனத்தின் தடயங்கள் ஆறு மணி நேரமே நீடிக்கும். ஆனால் சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சுஷாந்த் சிங் உடல் மீட்கப்பட்டு சுமார் 10 மணி நேரத்திற்குப் பின்னரே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல எய்ம்ஸ் தடயவியல் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா, நடிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நேர முத்திரை இல்லை எனக் கூறி, 'போட்ச் அப்' பிரேத பரிசோதனை முறை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் முன்னதாக டெல்லியைச் சேர்ந்த மற்றொரு தடயவியல் நிபுணர் தடயவியல் அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்