’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்?... எப்போது முடியும்? - மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கினால் பொருளாதார ரீதியான பாதிப்பு, வேலையிழப்பு, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பெரிதும் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா எப்போது உச்சம் தொடும்? எந்த தேதியில் முடிவுக்கு வரும்? என பிரபல ஊடக நிறுவனமான டைம்ஸ் நவ் (Times Now) கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 13 மாநிலங்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இது மட்டுமின்றி சென்னை, தானே, அஹமதாபாத், மும்பை, புனே, சூரத், பெங்களூர், ஜெய்ப்பூர் ஆகிய முக்கிய நகரங்களிலும் இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா எப்போது உச்சம் தொட்டு? எப்போது முடிவுக்கு வரும்? என்பதை கீழே காணலாம்.
மாநிலங்கள் கொரோனா உச்சம் கொரோனா முடிவு
1. மஹாராஷ்டிரா ஆகஸ்ட் 1 செப்டம்பர் 30
2. தமிழ்நாடு ஜூலை 21 செப்டம்பர் 25
3. டெல்லி ஜூன் 27 செப்டம்பர் 18
4. தெலுங்கானா ஜூலை 29 ஆகஸ்ட் 25
5. கேரளா ஆகஸ்ட் 10 செப்டம்பர் 18
6. உத்தர பிரதேசம் ஆகஸ்ட் 18 செப்டம்பர் 18
7. ராஜஸ்தான் ஆகஸ்ட் 2 செப்டம்பர் 29
8. ஆந்திரா ஆகஸ்ட் 16 செப்டம்பர் 25
9. மத்திய பிரதேசம் ஆகஸ்ட் 10 செப்டம்பர் 25
10. கர்நாடகா ஆகஸ்ட் 4 செப்டம்பர் 25
11. குஜராத் ஜூலை 21 செப்டம்பர் 20
12. மேற்கு வங்காளம் ஆகஸ்ட் 20 செப்டம்பர் 19
13. ஹரியானா ஜூன் 20 செப்டம்பர் 4
நகரங்கள் கொரோனா உச்சம் கொரோனா முடிவு
1. ஜெய்ப்பூர் ஏப்ரல் 22 ஆகஸ்ட் 21
2. சூரத் ஆகஸ்ட் 11 செப்டம்பர் 20
3. புனே ஜூலை 29 செப்டம்பர் 18
4. பெங்களூர் ஆகஸ்ட் 4 செப்டம்பர் 25
5. மும்பை ஜூலை 1 செப்டம்பர் 10
6. சென்னை ஜூலை 5 செப்டம்பர் 19
7. அஹமதாபாத் ஜூன் 18 ஆகஸ்ட் 28
8. தானே ஜூலை 26 செப்டம்பர் 24
மற்ற செய்திகள்