Wrong ரூட்டில் வந்த டிராக்டர்?.. "நேரா பென்ஸ் கார் மேல".. மறுகணமே சாலையில் அரங்கேறிய பயங்கரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபென்ஸ் கார் மீது டிராக்டர் ஒன்று மோதிய நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம், திருப்பதி அருகே அமைந்துள்ள திருப்பதி - பெங்களூர் நெடுஞ்சாலையான சந்திரகிரி பை பாஸ் அருகே தான் விபத்து ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
அந்த சாலையில், Mercedes Benz கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த சமயத்தில் திடீரென எதிர் திசையில் இருந்து தவறாக வந்த டிராக்டர் ஒன்று யாரும் எதிர்பாராத நேரத்தில் பென்ஸ் கார் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
காரில் இருந்தவர்கள், எதிர்பாராத நேரத்தில் இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததால் அவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். அதே வேளையில், பென்ஸ் கார் மீது வேகமாக மோதிய டிராக்டர், மறுகணமே இரண்டு துண்டாக பிளந்து போனது கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.
தவறுதலாக வண்டியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர், விபத்து நடந்த மறுகணமே சில காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், பென்ஸ் காரில் இருந்த நபர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக, சம்பவ இடம் வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். மேலும், தப்பித்து ஓடிய டிராக்டர் ஓட்டுநரையும் போலீசார் தேடி வருகின்றனர். நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் பலருக்கும் இந்த சம்பவம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனநெட்டிசன்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், பென்ஸ் கார் மீது மோதி இரண்டாக பிளந்த டிராக்டர் தொடர்பான செய்தி, பலரையும் பதற்றத்தில் உறைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்