’அப்டின்னா’.. 'எல்லா பயபுள்ளைங்களும் இதே வேலையாத்தான் திரியுதுங்களா’.. 'கஷ்டம்டா சாமி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் டிக்-டாக்கில் நடித்து, ஆடியோ, பாடியோ வீடியோக்களை பதிவிட்டுவிட்டு, லைக்கிற்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 12 லட்சம் பேர் என்று டிக்டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்காமல், அந்தத் திறமைகளுக்கான சரியான தளம் கிடைக்காமல் வெவ்வேறு வாழ்க்கைகளை வாழும் பலருக்கும், தங்கள் தாழ்வு மனப்பான்மைகளைப் போக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கைகளால சமூக வலைதளங்கள் வரத் தொடங்கின.
அவற்றில் முக்கியமான டிக்-டாக்கில் ஆடல், பாடல், நடிப்பு என பல விதமானவற்றை சீரியஸாகவும் பொழுது போக்குக்காகவும் செய்து டிக்-டாக்கில் பலரும் பதிவிடத் தொடங்கினர். பலருக்கு விடியும் காலையும்;முடியும் இரவும் டிக்-டாக்காக இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களின் வீடியோக்களுக்கு லைக் வரவில்லை என்று ஏங்கும் அளவிற்கு, அந்த டிக்-டாக்கிற்கே அடிமையாகும் மனநிலையை பலர் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் மொத்தம் 12 லட்சம் பேர், அதாவது 120 மில்லியன் பேர் என்று பைட் டான்ஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை வைத்துக்கொண்டு 11 மொழியிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் பொழுதுபோக்கு செயலிகளை இயக்கும் இந்த நிறுவனத்தின் டிக்-டாக்கில் பதிவிடும் வீடியோக்களை அனுமதிக்க 500 பேர் கொண்ட ஊழியர் குழு 24 மணி நேரமும் இயங்குகிறது.
இந்த பணியாளர்கள் கடந்த ஆண்டில் பதிவிடப்பட்ட வன்முறை மற்றும் ஆபாச வீடியோக்களை அழித்துவிட்டதாகவும், டிக்டாக்கில் ஒரு மாதத்திற்கு 12 லட்சம் பயனாளர்கள் தங்கள் வீடியோக்களை பதிவிட்டுவிட்டு லைக்கிற்காக காத்திருப்பதாகவும் இந்த நிறுவனத் தலைமை நிறுவனர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சமீக காலமாக டிக்-டாக்கை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எழுந்த புகார்களின் பேரில், 13 விதிகளுடன் டிக்டாக் ஒழுங்குபடுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.