'பைக்ல ஏறு, நான் உன்ன ட்ராப் பண்றேன்...' 'இருட்டான இடத்துல வண்டிய ஸ்டாப் பண்ணிட்டு, 16 வயசு சிறுமியை...' கொந்தளிக்க வைக்கும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் 16 வயது சிறுமிக்கு பைக்கில் லிப்ட் கொடுப்பதாக கூறி 3 இளைஞர்கள் கற்பழித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தின் பிப்ரா பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தன் காதலனை சந்தித்து விட்டு, சஹர்சாவிலிருந்து கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சிறுமி தன் காதலனை சந்தித்து விட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போது வழியில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞன் சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக கூறியுள்ளார்.
அவரை நம்பி வண்டியில் ஏறிய பெண்ணை அந்த இளைஞர் கம்ஹாரியா கிராமத்தில் இருட்டாக இருக்கும் பகுதியில் வண்டியை நிறுத்தி, சிறுமியிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இளைஞரின் இரு கூட்டாளிகளும் சேர்ந்து, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த கொடூர சம்பவத்தில் பெருமளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அந்த பெண் அந்த இடத்திலிருந்து ஓடிவந்து ஒரு கிராம காவலரிடம் உதவி கேட்டுள்ளார். சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் பின்னர் பெண் காவல் நிலையத்தை அழைத்து சம்பவம் குறித்து தெரிவித்தார்.
அதையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சிறுமி அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய, ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (எஸ்.எச்.ஓ) பிரேம்லதா பூபாஸ்ரீ, சிறுமி அளித்த புகாரின் பெயரில் மூன்று இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த அடையாளம் தெரியாத இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறோம்' என கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் சிறுமியின் காதலுக்கும் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தங்களின் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவராக காதலனின் பெயரும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்