அம்மாடியோவ்..! ‘ஒரு டீ-ன் விலை ரூ.1000’.. அப்படி என்ன ஸ்பெஷல்..? வியக்க வைத்த டீக்கடை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டீ கடை ஒன்றில் 1000 ரூபாய்க்கு ஒரு டீ விற்கப்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாடியோவ்..! ‘ஒரு டீ-ன் விலை ரூ.1000’.. அப்படி என்ன ஸ்பெஷல்..? வியக்க வைத்த டீக்கடை..!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த முகுந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீம் கங்குலி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு நிர்ஜாஷ் டீ ஸ்டால் என்ற டீ கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என பிரதீம் கங்குலி நினைத்துள்ளார். அதனால் பல விதமான டீ-ஐ விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

This Kolkata tea stall serves special tea for Rs1000 per cup

இவரது கடையில் ரூ.12 முதல் ரூ.1000 வரை டீ விற்பனை செய்யப்படுகிறது. 1000 ரூபாய்க்கு அப்படி என்ன ஸ்பெஷல் டீ என்றால்? போ-லே ((Bo-Lay Tea)) என்ற டீக்காக போடப்படும் தேயிலையின் விலை ஒரு கிலோ 2.8 லட்சம் ரூபாயாம். அதனால்தான் இந்த போ-லே டீயை 1000 ரூபாய்க்கு விற்பதாக பிரதீம் கங்குலி தெரிவித்துள்ளார்.

This Kolkata tea stall serves special tea for Rs1000 per cup

இதுகுறித்து தெரிவித்த பிரதீம் கங்குலி, ‘எனது டீ கடையில் உலகம் முழுவதிலும் உள்ள 115 வகையான டீக்கள் உள்ளன. ஆரம்பத்தில் குறைந்த அளவு மக்களே வருகை தந்தனர். ஆனால் தற்போது அதிகமான மக்கள் டீ குடிக்க வருகிறார்கள். ஜப்பானின் சிறப்பு சில்வர் ஊசி வெள்ளை தேயிலை ஒரு கிலோ 2.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய பிரீமியம் தேயிலை கலந்த டீ-க்கு 1000 ரூபாய் செலுத்துவது தவறில்லை என்று மக்கள் புரிந்து கொள்கிறார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

This Kolkata tea stall serves special tea for Rs1000 per cup

பிரதீம் கங்குலியின் நிர்ஜாஷ் டீ கடையில் சில்வர் நீடில் ஒயிட் டீ, லாவண்டர் டீ, ஹைபிஸ்கஸ் டீ, ஒயின் டீ, துளசி இஞ்சி டீ, புளு திசானே டீ, டீஸ்டா வாலி டீ, மகாய்பாரி டீ, ருபயோஸ் டீ, ஒகேத்தி டீ என 100 வகையான டீக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்