“கறந்த பாலில் இத்தனை விவகாரமா?”.. ‘இலங்கை வம்சாவளி’ நகைச்சுவை எழுத்தாளருக்கு ‘கனடாவில்’ நடந்த வேடிக்கை அனுபவம்! வெளியான பரபரப்பு புத்தகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கனேடிய நகைச்சுவையாளரும் எழுத்தாளருமான Pardis Parker என்பவரின் புத்தகம் அண்மையில் வெளியாகியது.  கனடாவைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின் தாய் ஒரு இலங்கை வம்சாவளியினர், தந்தை ஈரான் வம்சாவளியினர். தனது தந்தையின் கலாச்சாரத்துடன் இணைந்த வேடிக்கையான ஒரு நிகழ்வை மையப்படுத்தி ஒரு நகைச்சுவையான புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

“கறந்த பாலில் இத்தனை விவகாரமா?”.. ‘இலங்கை வம்சாவளி’ நகைச்சுவை எழுத்தாளருக்கு ‘கனடாவில்’ நடந்த வேடிக்கை அனுபவம்! வெளியான பரபரப்பு புத்தகம்!

அந்த புத்தகத்தின் பெயர் Illegal Milk. அதாவது சட்டவிரோத பால். ஈரானில் தயிர் தயாரிப்பதற்காக கறந்த பாலை பதப்படுத்துவதற்கு முன்பே அப்படியே பயன்படுத்துவார்கள். அதேசமயம் கனடாவில் கறந்த பாலை அப்படியே பயன்படுத்துவது சட்ட விரோதம் எனப்படுகிறது. இப்படியான நிலையில்  கனடாவில் இருந்த Parker-ன் தாத்தாவுக்கு கறந்த பால் வேண்டும். ஆனால் விவசாயிகளால் கறந்த பாலை அப்படியே விற்க முடியாது.

இதனால்  Parker-ன் தாத்தா விவசாயிகளுடன் சேர்ந்து ஒரு திட்டம் போட்டார். விவசாயிகள் பண்ணையின் பின்பக்கம் ஒரு பாத்திரத்தில் கறந்த பாலை வைத்து விடுவதும் தாத்தா அந்த பாலை நேரடியாக எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அங்கு வைத்து விட்டுச் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது.

This is How buying illegal milk helped Srilanka Origin Canadian Writer

அப்படி ஒரு முறை தாத்தா பாலை எடுத்துச் செல்லும்போது பாலின் உரிமையாளர் அங்கு வந்துவிட்டார். அதனை ஆறு வயது சிறுவனான Parker பார்த்து பயத்தில் நடுங்கி போய்விட்டாராம். ஏனென்றால் தாத்தா கறந்த பாலை எடுப்பதை அந்த விவசாயி பார்த்துவிட்டார். இந்த அனுபவத்தை மையப்படுத்தி, அதை இப்போது நினைவு கூறும் வகையிலும் நகைச்சுவை போக்கிலும் வேடிக்கையான புத்தகமான Illegal Milk எனும் புத்தகத்தை Pardis Parker எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்