அடேங்கப்பா எவ்ளோ பெரிசு..! Food lovers-க்கு ‘செம’ சான்ஸ்.. இந்த தோசையை சாப்பிட்டா ‘பரிசு’ எவ்ளோ தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

10 அடி நீளமுள்ள தோசை சாப்பிடுபவர்களுக்கு பரிசு தொகையை உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

அடேங்கப்பா எவ்ளோ பெரிசு..! Food lovers-க்கு ‘செம’ சான்ஸ்.. இந்த தோசையை சாப்பிட்டா ‘பரிசு’ எவ்ளோ தெரியுமா..?

கொரோனா ஊரடங்கால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக உணவகங்கள். தற்போது மக்கள் மெல்ல மெல்லம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் டெல்லியின் உத்தம் நகரில் உள்ள Swami Shakti Sagar என்ற உணவகம், 10 அடி நீளமுள்ள தோசையை சாப்பிடும் நபருக்கு ரூ.71,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பார்க்கும்போது இது எளிதான போட்டி போன்று தோன்றலாம். ஆனால், 10 அடி நீளமுள்ள தோசையை அவ்வளவு எளிதில் தனி நபரால் சாப்பிட முடியாது என்பதே உண்மை. ஆனாலும் பலர் இந்த போட்டியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

This hotel will pay Rs 71000, who can devour their 10-ft dosa

இதுகுறித்து ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோக்களை பார்த்த சிலர், அந்த தோசையின் விலை என்ன என்பதை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அந்த அவர், தோசையின் விலை ரூ.1500 என பதிலளித்துள்ளார். மேலும், இந்த போட்டியில் கலந்து கொண்டு தோற்றுவிட்டோம் என்றால், தோசைக்கான பணத்தை செலுத்திவிட்டுதான் செல்ல வேண்டும். ஆனால், போட்டியில் வெற்றி பெற்று விட்டால், அதற்கான பரிசு தொகையான ரூ.71,000 ரொக்க பணத்தை வென்று விடலாம்.

இந்த வீடியோவுக்கு கீழே பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், இவ்வளவு பெரிய தோசையை சாப்பிடுவது கடினம் தான் என்றும், ஆனால் பணத்திற்க்காகவே தோசையை சாப்பிட்டு விடலாம் என்றும் கூறியுள்ளனர். சிலர் இந்த வீடியோ எடுத்தவரையே, அந்த தோசை போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்று குறும்பாக கூறியுள்ளனர்.

FOOD, DOSA, DELHI

மற்ற செய்திகள்