'இந்த சின்ன வயசுல' எம்.பி ஆகி அரசியல் பொறுப்புடன் மக்களவைக்கு செல்லும் முதல் பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவேலூர் நீங்கலாக இந்தியாவில் 542 தொகுதிகளில் 17வது இந்திய பொது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் மத்தியக் கட்சியான பாரதி ஜனதா கட்சி கூட்டணி 350 இடங்களில் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் தனது ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது.
மொத்தம் 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 76 பேர் வெற்றி பெற்றனர். இதில் போட்டியிட்ட பெண் எம்.பிக்களில் மிக வயது குறைந்த இளம் எம்.பி என்கிற ஒரு பிரபலத்தை ஒடிசாவின் கியோஞ்சர் என்கிற பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்திராணி முர்மு என்கிற பி.டெக் பட்டதாரி பெண் பிரபலமாகியுள்ளார். பொது அரசியலில், வயது குறைந்த ஆண்களையே அதிகம் பார்க்க முடியாத சூழ்நிலையில், 25 வயதேயான இளம் பெண் ஒருவர் எம்.பியாகி இருப்பது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. சிறு வயதில் இருந்தே, தன் தந்தையைப் பார்த்து தன்னையும் சமூக அக்கறைகளில் ஈடுபத்திக்கொண்ட சந்திராணி, அரசு வேலைக்காக படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான், உறவினர் ஒருவரின் ஆலோசனைப்படி பிஜூ ஜனதா தளம் கட்சி சார்பில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிடுவதற்காக கோரினார். வேட்பு மனுத்தாக்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர்தான், அக்கட்சியால், சந்திராணி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் மக்களை சந்திக்க நேரமில்லாது போனதாகக் கூறும் சந்திராணி, தன் முதல் வேலையே தன் தொகுதி மக்கள் மற்றும் அவர்களின் நெருக்கடிகள், தேவைகள் குறித்து அறிவதுதான் என்று கூறியுள்ளார்.
இவரை எதிர்த்து அதே தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் நாயக், அதே தொகுதியில் 2 முறை எம்.பியாக இருந்தவர். அவரை வீழ்த்தி பெருவாரியான வாக்குவித்யாசத்தில் ஜெயித்து, இந்தியாவில் இருந்து பாராளுமன்றத்துக்குச் செல்லும் முதல் இளம் பெண் எம்.பியாக சந்திராணி புகழ்பெற்று பேசப்பட்டு வருகிறார்.