அடுத்த டைம் பாஸ்வேர்டு மாத்தும்போது எலான் மஸ்க்கை நெனெச்சுக்கங்க.. காவல்துறை போட்ட ட்வீட்... ஓஹோ இதுதான் விஷயமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அடுத்த முறை பாஸ்வேர்டை மாற்றும்போது எலான் மஸ்க்கை நினைத்துப்பார்க்கும்படி உத்தரகாண்ட் மாநில காவல்துறை டிவிட்டரில் அறிவுரை வழங்கியிருக்கிறது.

அடுத்த டைம் பாஸ்வேர்டு மாத்தும்போது எலான் மஸ்க்கை நெனெச்சுக்கங்க.. காவல்துறை போட்ட ட்வீட்... ஓஹோ இதுதான் விஷயமா?

உலக பாஸ்வேர்டு தினம்

நம்மில் பலருக்கும் நம்முடைய போன், மின்னஞ்சல், சமூக வலைதள பக்கங்களின் பாஸ்வேர்டுகள் அவ்வப்போது மறந்துபோய்விடும். இதனால் அனைத்துக்கும் ஒரேமாதிரியான பாஸ்வேர்டை வைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதிலும் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக சுலபமாக கணிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களை செட் செய்பவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவரும் நிலையில், ஹேக்கர்களின் கண்களில் சிக்காமல் இருக்க முழுமையான பாதுகாப்புடன் இருக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அவற்றுள் முக்கியமானது கடினமான பாஸ்வேர்டுகளை வைப்பது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடம் மே மாதத்தின் முதல் வாரம் வரும் வியாழக்கிழமையை உலக பாஸ்வேர்டு தினமாக அறிவித்தது இன்டெல் நிறுவனம். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

அறிவுரை

இந்நிலையில், உலக பாஸ்வேர்டு தினத்தை முன்னிட்டு உத்திரகாண்ட் மாநில போலீசார் டிவிட்டர் மூலமாக மக்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். அதில்,"இன்று உலக பாஸ்வேர்டு தினம். எலான் மஸ்க் தனது மகனுக்கு பெயர்சூட்டியுள்ளதை போலவே உங்களுடைய பாஸ்வேர்டையும் கடினமாக இருப்பதை உறுதிசெய்யுங்கள். பாதுகாப்போடு இருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் தனது மகனுக்கு ‘X Æ A-12’ எனப் பெயர்சூட்டியது சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில், உத்திரகாண்ட் மாநில காவல்துறையினர் எலான் மஸ்க் தனது மகனுக்கு சூட்டியதை போன்று கடினமாக பாஸ்வேர்டை வைக்கும்படி மக்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

ELONMUSK, PASSWORD, POLICE, பாஸ்வேர்டு, உத்திரகாண்ட், எலான்மஸ்க்

மற்ற செய்திகள்