திருடிய சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்.. கூடவே இருந்த ஒரு லெட்டர்.. சுவாரஸ்ய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோயில் திருடிய சிலைகளை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையர்கள் எழுதிய கடிதம் கவனம் பெற்று வருகிறது.
Also Read | “இந்த லிஸ்ட்டை சொல்ற வரை Twitter-ஐ வாங்க மாட்டேன்”.. திடீர் ட்விஸ்ட் வச்ச எலான் மஸ்க்..!
உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டம் தாரூஹா நகரில் உள்ள ஜெய் தேவதாஸ் அகாராவில் 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவில் ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி காலை பூசாரியின் மனைவி கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது கடவுள் சிலைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பூசாரி மஹந்த் ராம் பாலக் தாஸ், அஷ்ட உலோகத்தால் செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள ஸ்ரீ ராமர் சிலை உட்பட பல லட்சம் மதிப்பிலான 16 சிலைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பூசாரி மஹந்த் ராம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சூழலில் கொள்ளை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு மகாவீர் நகரில் உள்ள பூசாரி மஹந்த் ராம் வீட்டின் முன் சாக்குப்பை இருந்துள்ளது. அதை திறந்து பார்த்தபோது திருடப்பட்ட சிலைகள் இருந்தது தெரியவந்துள்ளது. அந்த சிலைகளுடன், கொள்ளையர்கள், தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கோரி எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் அந்த பையில் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில், கடவுள் சிலைகளை கொள்ளையடித்ததில் இருந்து தங்களுக்கு கெட்ட கனவுகள் வருவதாகவும், தூங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் தான் சிலைகளை திருப்பி கொண்டு வந்ததாகவும், கோவிலில் மீண்டும் சிலைகளை நிறுவ பூசாரியிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
மொத்தம் 16 சிலைகள் காணாமல் போன நிலையில் 14 சிலைகள் மட்டுமே அந்த சாக்குப்பையில் இருந்தது. இரண்டு அஷ்ட உலோக சிலைகள் அதில் இல்லை என பூசாரி மஹந்த் ராம் பாலக் தாஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்