"இத திருடிட்டு போய் நான் பட்ட பாடு இருக்கே".. கோவில் நகைகளை திருடிய திருடனின் உருக்கமான கடிதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் கோவிலில் இருந்து திருடிச் சென்ற நகைகளை மீண்டும் கோவில் வாசலிலேயே வைத்துவிட்டு அதனுடன் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான் திருடன் ஒருவன். இது உள்ளூர் மக்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும் நிலையில், திருடனின் மன்னிப்பு கடிதமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | லாட்டரியில் ₹ 248 கோடி ஜெயிச்ச நபர்.. குடும்பத்துக்கு தெரிய கூடாதுன்னு எடுத்த முடிவு.. வைரல் சம்பவம்
கோவில்களில் திருடர்கள் கைவரியை காட்டுவதை நாம் அன்றாடம் கேள்விப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ளது சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோவில்.
லம்தா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் இந்த கோவிலில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிருந்து வெள்ளி மற்றும் வெண்கலத்தால் ஆன, 10 பொருட்கள் மர்ம நபரால் களவாடப்பட்டிருக்கின்றன. உடனே இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் காவல்துறையில் புகார் கொடுக்க, திருடனை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே திருடனே, தான் எடுத்துச் சென்ற பொருட்களை கொண்டுவந்து வைத்துவிட்டு மன்னிப்பு கடிதத்தையும் உடன் வைத்துச் சென்றிருக்கிறான். அந்த கடிதத்தில் இந்த பொருட்களை திருடியதில் இருந்து, பெரும் கஷ்டங்களை சந்தித்ததாகவும் அதனாலேயே பொருட்களை ஒப்படைத்துவிட்டதாகவும் அந்த திருடன் குறிப்பிட்டிருக்கிறான்.
இந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே பை ஒன்று கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த கோவில் நிர்வாகத்தினர் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் திருடப்பட்ட கோவில் நகைகள் மற்றும் ஒரு கடிதம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜய் தாபர் அந்த பொருட்களை ஆராய்ந்தார்.
திருடப்பட்ட நகைகளுடன் இருந்த கடிதத்தில்,"என்னை மன்னித்துவிடுங்கள். இதை திருடிச் சென்ற பிறகு பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்" என குறிப்பிட்டிருந்ததாக விஜய் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பொருட்கள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயலை செய்த திருடனை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விஜய் தெரிவித்திருக்கிறார். இது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | 32 வயசு வித்தியாசம்.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவருகூட தான்.. ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி..!
மற்ற செய்திகள்