காணாமல் போன '45,000' ரூபா மொபைல் போன்... "என்னால முடியலைங்க"... கொஞ்ச 'நாள்' கழிச்சு... 'திருடனே' திருப்பிக் கொடுத்த 'சுவாரஸ்யம்' - நடந்தது என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்குவங்க மாநிலம், ஜமால்பூர் என்னும் பகுதியில் ஸ்வீட் கடை ஒன்றில் வைத்து நபர் ஒருவர் தனது 45,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை தொலைத்துள்ளார்.
தொடர்ந்து, மீண்டும் அந்த கடைக்கு சென்று தேடிப் பார்த்த போது, அவரது போன் அங்கிருந்து திருடப்பட்டது தெரிந்தது. தனது மொபைல் போன் திருட்டு போனது தொடர்பாக, அந்த நபர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அவர் தனது எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் மீண்டும் தனது எண்ணைத் தொடர்பு கொண்டு பார்த்த போது, போனைத் திருடிய நபர் அழைப்பை எடுத்துள்ளார். அழைப்பை எடுத்த அந்த நபர், அதனை உங்களிடமே திருப்பித் தந்து விடுகிறேன் என்றும், எனக்கு இதனை சரிவர பயன்படுத்த தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளான். இந்த பதிலை கேட்டதும் மொபைல் போனின் உரிமையாளர் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.
தொடர்ந்து மறுநாளே போலீசார் உதவியுடன் போனை திருடிச் சென்ற நபரின் வீட்டிற்கே சென்று தனது போனை திரும்பப் பெற்றார். போனைத் திருடிய நபர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாக போனின் உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார். மேலும், திருடிய பொருளை திருப்பி அளித்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
மற்ற செய்திகள்