மொத்த 'ஸ்டாக்'கும் தீந்து போச்சு... ஊரடங்கில் இந்தியர்கள் 'தேடித்தேடி' வாங்கிக்குவித்த பொருட்கள் இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமொத்த ஸ்டாக்கும் தீர்ந்து போகுமளவுக்கு இந்தியர்கள் பொருட்களை வாங்கி குவித்து இருக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய பொதுமக்கள் எந்த பொருளை அதிகமாக வாங்கி குவித்து இருக்கின்றனர் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஆயுர்வேதா மருந்துகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். தாபர் இந்தியா லிமிடெட் மற்றும் ஹிமாலயா மருந்து நிறுவனங்களின் மருந்துகளை வாங்கி சாப்பிட்டுள்ளனர். chyawanprash அதிகமாக வாங்கியுள்ளனர். இதில் தேன், சர்க்கரை, நெய், மூலிகை மருந்துகள், மசாலா ஆகியவை உள்ளது. சைனஸ், டான்சில்ஸ் ஆகிய தொந்தரவுகளுக்கு நிவாரணம் அளிக்கும் செப்டிலின் என்ற மருந்தை அதிகம் வாங்கியுள்ளனர். இதிலும் மூலிகை உள்ளது.
இதற்கு அடுத்ததாக மேகி, இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், குக்கிங் பேட்ஸ் ஆகிய உண்வு பொருட்களை அதிகளவு வாங்கி உள்ளனர். இதனால் இந்த பொருட்கள் ஸ்டாக் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. சாக்லேட் வகைகளில் கிட்கேட், மஞ்ச் ஆகியவை அதிகம் விற்பனையாகி உள்ளன. பிஸ்கட் வகைகளில் பார்லேஜி, பிரிட்டானியா அதிகம் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. லேப்டாப் வகைகளை அதிகம் தேடி இருக்கின்றனர். வீட்டில் இருந்து வேலை என்னும் சூழலால் லேப்டாப்களுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஜீ 5 சப்ஸ்கிரிப்ஷன் 45% அதிகரித்து நெட்பிளிக்ஸை முந்தியுள்ளது.
ஆத்திர, அவசரத்துக்கு தங்கம் அடகு வைப்பது அதிகரித்து இருக்கிறது. முத்தூட் பினான்ஸ் மற்றும் மணப்புரம் பினான்ஸ் இரண்டும் அதிக அளவில் நகைக் கடன் கொடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. முத்தூட் பினான்ஸ் 57% கூடுதலாக நடப்பாண்டில் நகைக் கடன் கொடுத்துள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஜூசர், மிக்ஸி, மைக்ரோவேவ், டோஸ்டர் ஆகியவை அதிகளவில் விற்றுள்ளன. வாக்குவம் கிளீனர் நான்கு மடங்கு அதிகமாக விற்றுள்ளது. பாத்திரம் கழுவும் இயந்திரத்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
கொரோனா காரணமாக சலூன் கடைகள் அடைத்து இருந்ததால் பலரும் டிரிம்மர்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். கொரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட ஐந்து மடங்கு அதிகமாக இதை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதேபோல் பிலிப்ஸ் நிறுவனத்தில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் 60%-70% அதிகமாக விற்றுத் தீர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்