'அடுத்த 3 மாசத்துக்கு டேட்டா, போன்கால் எல்லாம் இதே ரேட் தான், அதுக்கப்புறம்...' 'முன்கூட்டியே ரீசார்ஜ் செய்தால் பாதிப்பை தவிர்க்க வாய்ப்பிருக்கு...' தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அடுத்த 3 மாதங்களுக்கு போன்கால் மற்றும் இன்டர்நெட் கட்டணங்களை உயர்த்தப்போவதில்லை என, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

'அடுத்த 3 மாசத்துக்கு டேட்டா, போன்கால் எல்லாம் இதே ரேட் தான், அதுக்கப்புறம்...' 'முன்கூட்டியே ரீசார்ஜ் செய்தால் பாதிப்பை தவிர்க்க வாய்ப்பிருக்கு...' தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு...!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்க்க, கட்டண உயர்வை அறிவிக்க இருப்பதாக மொபைல் நிறுவனங்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்திருந்தன.

இந்த நிலையில், இணைய கட்டணமாக வோடபோன் ஒரு ஜிபிக்கு 35 என நிர்ணயிக்கலாம் எனவும், அதேபோல் ஐடியா நிறுவனம் 30 எனவும், ஏர்டெல் நிறுவனம் 20 எனவும் நிர்ணயிக்கலாம் என ஜியோ பரிந்துரை செய்தன. இதன்படி கட்டணம் உயர்த்தினால், தற்போது உள்ளதை விட ஐந்து முதல் பத்து மடங்கு அளவுக்கு கட்டணங்கள் உயர வாய்ப்புகள் உள்ளன.  இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைக்காக இயங்கும் நிறுவனங்கள் தவிர, பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

தற்காலிக தொழிலாளர்கள் பலர் தங்கள் பணியை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் சம்பள குறைப்பை அறிவித்துள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கடன் தவணை இஎம்ஐகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தற்போது உத்தரவிட்டுள்ளது.  இதை பின்பற்றி, கட்டண உயர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சங்க நிர்வாகி கூறுகையில் "இந்திய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கி 1.6 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை உள்ளது. எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணத்தில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு கடன் தவணைகளை வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. இதே பரிந்துரையை நாங்களும் பின்பற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனவே, இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது. அதற்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்பவர்கள், மூன்று மாதங்களுக்கு பிறகும் கட்டண உயர்வின் பாதிப்பை சில நாட்களுக்கு தள்ளிப்போட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TELECOMMUNICATIONS