‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்!’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்!’ - மத்திய அரசு.

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்!’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்!’ - மத்திய அரசு.

அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதித்திருந்த நிலையில் 50% இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்கை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்கள் திரையரங்குக்குள் செல்லும்போது சானிட்டைசர் வழங்கப்பட வேண்டுமென்றும், கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை மட்டுமே திரை அரங்குகளுக்குள் விற்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

திரையரங்குக்குள் வரும் பார்வையாளர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் திரைப்பட இடைவேளையின் போது பார்வையாளர்கள் தங்களுடைய இருக்கைகளை விட்டு வெளியில் எழுந்து செல்வதை தவிர்க்க வேண்டும், என்றும் கூட்டத்தை தடுப்பதற்கு டிக்கெட் விற்பனை கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு வேளை கொரோனா அறிகுறி இருந்தால் திரையரங்குக்கு பார்வையாளர் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக திரைப்படம் துவங்கும் முன்பும் இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு படங்களை திரையிட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்