“வெளி உணவுகளை எடுத்துவர திரையரங்குகள் தடை விதிக்கலாம்.. ஆனால்..” - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவது குறித்த வழக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திடம் வந்தது.

“வெளி உணவுகளை எடுத்துவர திரையரங்குகள் தடை விதிக்கலாம்.. ஆனால்..” - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

Also Read | ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

இதன் தொடர்பில் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம், வெளி உணவுகளை கொண்டு வருவதற்கு இருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை அடுத்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி படம் பார்வையாளர்கள் வெளி உணவு மற்றும் பானங்களை கொண்டு செல்வதை திரையரங்கங்கள் தடை செய்யலாம். ஆனால் அதே சமயம், தரமான மற்றும் சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.  அத்துடன், குழந்தை அல்லது பிறந்த குழந்தையுடன் வருவோர் குழந்தைகளுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்ல திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

theatres can restrict outside food but free water must

Images are Subjects to Copyright © to their respective Owners.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டுள்ள இந்த தீர்ப்பில், திரையரங்குகள் உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து என்றும், அதில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு எனவும் இது திரையரங்கு உரிமையாளரின் வணிக ரீதியான முடிவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், தியேட்டரில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களை வாங்குவது, உண்பது அனைத்தும் பார்வையாளரின் தனி விருப்பம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

theatres can restrict outside food but free water must

Images are Subjects to Copyright © to their respective Owners.

உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு மூலம், இதற்கு முன்னர் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளில் வெளி உணவு மற்றும் பானங்களை கொண்டு செல்வதற்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read | “பாரதியின் புதுமைப் பெண்கள்” .. BIGG BOSS -ல் ஆட்சியர் கவிதா ராமு & SP வந்திதாவை வாழ்த்திய கமல் - முழு விபரம்.!

THEATRES, SUPREME COURT

மற்ற செய்திகள்