அக்டோபர் 1ம் தேதி முதல் ‘தியேட்டர்கள்’ திறக்கப்படும்.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅக்டோபர் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 50 பார்வையாளர்கள் அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குக்குள் வரும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாடகங்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகள் போன்றவை குறைந்த பார்வையாளர்களுடன் இயங்கலாம் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையுலகினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திரையரங்குகள் விரைவில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது முதல் மாநிலமாக மேற்கு வங்கம் திரையரங்குகளை திறக்கப்பட உள்ளது திரையுலகினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்