நல்ல நாள் அதுவுமா இப்படியா நடக்கணும்? திருமண ஊர்வலத்தில் 'படார்' என பயங்கர சத்தம்.. நாலு பக்கமும் சிதறி ஓடிய பொதுமக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாகண்ணூர்: கல்யாண ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட வெடியால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே திருமணம் என்றால் கொண்டாட்டம் தான். அது எந்த நாடாக இருந்தாலும், எந்த பண்பாடாகவும் இருந்தாலும் இரு குடும்பங்களும் இணையும் நிகழ்வு கோலாகலமாக இருக்கும். அது திருமணத்திற்கு முந்தைய போட்டோசூட் முதல் திருமணம் முடியும் வரை பல சம்பவங்கள் நடக்கும். இதற்கு ஏரளாமான பணம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்றார் போல திருமணம் நடக்கும் நாட்கள் கூடவும் செய்யும், குறையவும் செய்யும். வட இந்தியாவில் 3 நாட்கள் முதல் 7 நாட்கள் கூட நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக சங்கீத், மெஹந்தி, நலுங்கு என பல வகையாக கொண்டாடப்படும்.
திருமணத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வு:
எந்த அளவு மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறதே அதே அளவு சண்டை சச்சரவுகளும் ஏற்படும். அதை, உண்டாக்கும் நபர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற ஒரு நிகழ்வு தான் கேரளாவில் தற்போது நடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதம் முற்றி நடந்த மோதல்:
கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண விழாவையொட்டி கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடந்த இசை நிகழ்ச்சியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணசடங்கு முடிந்து நேற்று புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நான்கு பேர் கைது:
அப்போது, ஜிஷ்ணு என்பவரின் மீது கும்பல் ஊர்வலத்தில் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஜிஷ்ணுவின் தலையில் குண்டு வெடித்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்