Vilangu Others

பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு.. பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன்.. தாயின் செயலால் நெகிழ்ந்த போலீஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமலை: வீட்டை விற்று பணம் தராததால் ஆத்திரம் அடைந்த மகன், வயது முதிர்ந்த தாயை தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு.. பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன்.. தாயின் செயலால் நெகிழ்ந்த போலீஸ்

பணம் கேட்டு தாயை கொடுமையாக தாக்கிய மகனை போலீசார் கைது செய்தபோது, தாய் மகனுக்காக செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.  ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி பிரம்மானந்தபுரத்தை சேர்ந்தவர் நாகமணி. இவரது கணவர் வெங்கடேஸ்வரராவ். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கிய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வர ராவ் உடல் நலம் பாதிப்பால் காலமானார். கணவன் இறந்த நிலையில், நாகமணி தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் சேஷூ மனைவியுடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நாகமணி வசித்துவரும் வீட்டை விற்று பணம் தரும்படி சேஷு தொடர்ந்து தொல்லை தந்துள்ளார்.

The son who harassed the mother by asking for money

நாகமணி இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் மகனிம் சமாதானம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த  சேஷூ நேற்று வீட்டிற்கு வந்து தனது தாய் நாகமணியை காலால் எட்டி உதைத்தும் பாத்திரத்தால் தலையில் அடித்தும் கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மகன் தாயை தாக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, தாயை தாக்கிய குற்றத்திற்காக சேஷு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு  மாநில மகளிர் ஆணைய தலைவர் வாசிரெட்டி பத்மா மற்றும் அதிகாரிகள், நாகமணியின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.

அப்போது தாய் என்று கூட பார்க்காமல் அடித்து துன்புறுத்திய மகனை கைது செய்யலாமா? என பத்மா, நாகமணியிடம் கேட்டார். அதற்கு நாகமணி, 'எனது மகனை கைது செய்ய வேண்டாம். என்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும்படி அறிவுறுத்துங்கள், அதுவே போதும்' என கண்ணீர் மல்க தெரிவித்தார். சொத்திற்காக மகன் செய்த செயலை மன்னித்த தாயை நினைத்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும், "பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு" என நிரூபித்துவிட்டார் நாகமணி என்கின்றனர்.

The son who harassed the mother by asking for money

MOTHER, , NAGAMANI, ANDHRA PRADSH, POLICE, VIRAL VIDEO

மற்ற செய்திகள்