ஓடிப்போன 'டாடியை' கண்டுபிடிக்க... மகன் செய்த 'சூப்பர்' காரியம்... பலரையும் 'வியப்பில்' ஆழ்த்திய 'நெகிழ்ச்சி' சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மலு என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு பிரிந்து சென்ற தனது தந்தையை டிக்-டாக் செயலியின் உதவியால் கண்டுபிடித்த சம்பவம் அவரது குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓடிப்போன 'டாடியை' கண்டுபிடிக்க... மகன் செய்த 'சூப்பர்' காரியம்... பலரையும் 'வியப்பில்' ஆழ்த்திய 'நெகிழ்ச்சி' சம்பவம்...

ஆந்திர மாநிலம், நந்தியாலை சேர்ந்த புல்லய்யா என்பவர் குடும்ப சண்டை காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கே போனார், என்ன செய்கிறார், அவரது நிலை என்ன என்பது குறித்து விவரம் எதுவும் தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.

இந்நிலையில், அவரது மகன் நரசிம்மலு, காணாமல் போன தந்தையின் புகைப்படத்துடன், அவரை எண்ணி உருக்கமாக பேசும் வீடியோ ஒன்றை, 'டிக் டாக்'கில் பதிவிட்டார். சில நாட்களில் குஜராத்தில் இருந்த அவரது தந்தை புல்லையா இந்த வீடியோவை பார்த்துள்ளார். பிறகு டிக்-டாக்கிலேயே தனது மகனுக்கு பதில் அளித்துள்ளார்.

உடனே குஜராத் சென்ற நரசிம்மலு, தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தார். 6 வருடங்களுக்குப் பிறகு புல்லையா வீட்டிற்கு வந்ததைக் கண்ட அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்தனர்.

ANDRA, GUJARAT, MISSING FATHER, TIKTOK, FIND SON