இப்போ உடனே மேரேஜ் பண்ணனும்னா 'இதான்' ஒரே வழி...! 'கல்யாணம் பண்ண சாப்ட்வேர் இஞ்சினியர்கள் போட்ட 'பலே' ஐடியா...! - புரோகிதர கொண்டு வந்தது தான் 'செம' ஹைலைட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

 கொரோனா வைரஸ் பரவலால் கடந்த வருடம் பல திருமணங்கள் இதுவரை எதிர்பார்க்காத அளவிற்கு விதவிதமாக நடந்தது.

இப்போ உடனே மேரேஜ் பண்ணனும்னா 'இதான்' ஒரே வழி...! 'கல்யாணம் பண்ண சாப்ட்வேர் இஞ்சினியர்கள் போட்ட 'பலே' ஐடியா...! - புரோகிதர கொண்டு வந்தது தான் 'செம' ஹைலைட்...!

அதேபோல் இந்த வருடமும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேச ஜோடிகளுக்கு இடையே திருமணம் நடக்கவிருந்த நிலையில் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் ஜோடிகளை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்த மோஹித் சவுகான் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மண்டியைச் சேர்ந்த பிரதிபா தாகூரும் ஒரு முடிவில் இறங்கியுள்ளனர்.

முக்கியமாக இதில் கூற வேண்டியது என்னவென்றால், இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இதன்காரணமாக, ஆன்லைனில் 'கூகுள் மீட் ஆப்' மூலம் திருமணத்தை நடத்த வைக்க முடிவெடுத்தனர்.

மேலும் திருமணத்தில் இருதரப்பு குடும்பத்தினரும், உறவினர்களும் நேரடியாக பங்கேற்கவில்லை. ஆனால், மணமகனுக்கும், மணமகளுக்கும் ஆன்லைனில் ஆசீர்வாதம் அளித்தனர். அதோடு திருமணம் நடத்தி வைத்த பண்டிதரும் ஆன்லைனில் ஸ்பீக்கர் வசதியுடன் மந்திரங்களை கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்