'டின்னர்' செலவு '2.8 லட்சம்'... 2019ம் ஆண்டின் மிக உயரிய 'பில்'... தலைசுற்றும் 'புள்ளி விவரம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

 

'டின்னர்' செலவு '2.8 லட்சம்'... 2019ம் ஆண்டின் மிக உயரிய 'பில்'... தலைசுற்றும் 'புள்ளி விவரம்'...

பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்காக 2.8 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ள தகவல்  பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவிகரமாக இருக்கும் பிரபல செயலியான Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய 2 லட்சத்து 76,988 ரூபாயை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Dineout வெளியிட்டுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவுக்காக அவ்வளவு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா சென்றிருக்கலாம் என்றும் தனது வாகன ஓட்டுநருக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை பரிசளித்திருக்கலாம் என்றும் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உணவு பண்டங்களுக்காக அதிகமாக செலவழிப்பதை நாம் கேள்விப்பட்டிருந்தாலும், இரவு உணவிற்கு லட்சக்கணக்கான பணம் செலவழித்திருப்பது சற்று வினோதமாகவே பார்க்கப்படுகிறது.

DINNER, 2.8 LAKHS, BANGALURU, SURPRISING STATISTICS