இந்தியாவில் கொரோனாவுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ஒரே மாநிலம்.. இதுவரை யாருக்குமே பாதிப்பு இல்லையாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிக்காத மாநிலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ஒரே மாநிலம்.. இதுவரை யாருக்குமே பாதிப்பு இல்லையாம்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4021 பேர் வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படமால் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநில எல்லைகள் மூடப்பட்டது மட்டுமல்லாமல், சொந்த ஊர் திரும்பாமல் இருக்கும் மற்ற மாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்குவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திமாப்பூரை சேர்ந்த வணிகர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. உடனே அவர் அசாம் மாநிலம் கவுகாத்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது நாகலாந்து கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்