ஒரே ஒரு 'ஸ்மால்' அட்வைஸ் தான்... தலைநகரை மீண்டும் 'தக்கவைத்த' அரவிந்த் கெஜ்ரிவால்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 8 இடங்களை கைப்பற்றி பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற, காங்கிரஸ் ஒரு இடங்களை கூட வெல்லாமல் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஒரே ஒரு 'ஸ்மால்' அட்வைஸ் தான்... தலைநகரை மீண்டும் 'தக்கவைத்த' அரவிந்த் கெஜ்ரிவால்!

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றிக்கான ரகசியம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த தேர்தலில் அரசியல்  பிரஷாந்த் கிஷோர் அவருடன் இணைந்து பணியாற்றினார். அவர் வகுத்துக்கொடுத்த யுக்திகளின் அடிப்படையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் பணியாற்றி வெற்றிக்கனியை எட்டிப் பறித்திருக்கிறார். அதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே கெஜ்ரிவாலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஒரு அறிவுரையை வழங்கி இருக்கிறார்.

அது என்னவெனில் எதிர்க்கட்சிகள் உடனான மோதல் போக்கை கைவிட வேண்டும் என்பது தான். மேலும் பிரதமர் மோடியை தாக்கி பேசுவதை கைவிட வேண்டும் அப்போது தான் பாஜகவுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் கூட ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்கள். இதுதவிர மக்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுப்பவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பின்பற்றி தான் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வர் நாற்காலியில் அமரவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.