இதுவரை 'ராஜஸ்தானை' தாண்டாத 'வெட்டுக்கிளிகள்...' தற்போது தனது 'எல்லையை விரித்துள்ளது...' அதன் போக்கை 'கணிக்க முடியாது...' 'ஆய்வாளர்கள் கருத்து...'
முகப்பு > செய்திகள் > இந்தியாவெட்டுக்கிளிகள் பிரச்சினை தமிழ்நாட்டுக்கு வரவும் வாய்ப்புள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை என்று தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வெட்டுக்கிளிகள் பிரச்சினை தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை, உலகம் நாடுகளின் கையாளுகை, காலநிலை மாற்றத்துடன் உள்ள தொடர்பு என வெவ்வேறு கோணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் பரவலை ராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம்.
ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கின்றனர்.
மற்ற செய்திகள்