'நாம மட்டும் இல்லீங்க, மத்திய அரசும் அமேசான்ல தான் ஷாப்பிங்'... 'ஆன்லைனில் வாங்கிய பொருட்கள்'... வெளியான சுவாரசியமான லிஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் மூலமாகப் பொருட்கள் வாங்கும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்த கொரோனா நேரத்தில் ஆன்லைன் மூலமாகப் பொருட்கள் வாங்குவதையே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க விஷயமாகக் கருதப்படுவது பொருட்களின் விலை. ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமான தள்ளுபடிகள் வழங்கப்படுவதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் மத்திய அரசு இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியதன் மூலம் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ.7,500 கோடி) மிச்சமாகி உள்ளது தெரிய வந்துள்ளது. மத்திய அரசும் ஆன்லைன் மூலமாகப் பொருட்களை வாங்குமா என்பது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர், ஆன்லைன் மூலம் 40,000 கோடி டாலர் அளவுக்குப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 100 கோடி டாலர் மிச்சம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசின் இ-சந்தை இணையச் சேவை பெரும்பாலும் அமேசான்.காம் மூலம் பொருட்களை வாங்கியுள்ளது. அதிலும் அரசு என்ன பொருட்களை அமேசான் மூலம் வாங்கியிருக்கும் என்பது குறித்து அறியப் பலருக்கு ஆர்வம் ஏற்படலாம். அதுகுறித்த தகவலையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளார்கள். அதில், ''அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர், நாற்காலி, அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் இணையதளம் மூலம் வாங்கியதால் அரசுக்குப் பெருமளவு தொகை மிச்சமாகி உள்ளது. இந்த இணையதளத்தில் ஹிந்துஸ்தான் யுனி லீவர், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே இணையதள சந்தை தலைமை செயல் அதிகாரி தல்லீன் குமார் கூறுகையில், ''ஒவ்வொரு ரூபாயாகச் சேமித்ததில் அதிக தொகை சேமிக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வாறாகச் சேமிக்கப்பட்ட தொகை பிற முக்கியமான பணிகளில் பயன்படுத்த அரசு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தனது ஜிடிபி-யில் 18 சதவீத அளவுக்குப் பொருட்களை வாங்கச் செலவிடுகிறது. இதில் கால் பங்கு இணையதளம் மூலம் வாங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான கொள்முதல் மாறி இணையதளம் மூலம் கொள்முதல் செய்வதால் 10,000 கோடி டாலர் வரை சுகாதாரத் துறைக்கு செலவிடும் தொகை மீதமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 350 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் இணையதளம் மூலம் வாங்கப்படுகிறது. அடுத்த மூன்று அல்லது ஐந்தாண்டுகளில் இந்த அளவானது 10,000 கோடி டாலர் அளவை எட்டும் என, இணையதள சந்தை தலைமை செயல் அதிகாரி தல்லீன் குமார் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்