'கவலை படாதீங்க, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' ஆமா, நான் அமெரிக்கா ஆபீசர் தான்...' 'ஃபர்ஸ்ட் நான் சொல்ற அமவுண்ட் அனுப்புங்க...' பேஸ்புக் வழியாக நடந்த மோசடி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்க அதிகாரி போல் நடித்து பெண் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் பணத்தை அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கவலை படாதீங்க, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' ஆமா, நான் அமெரிக்கா ஆபீசர் தான்...' 'ஃபர்ஸ்ட் நான் சொல்ற அமவுண்ட் அனுப்புங்க...' பேஸ்புக் வழியாக நடந்த மோசடி...!

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஐதராபாத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவருக்கு அமெரிக்காவில் பணி புரிய ஆசை ஏற்பட்டு அதற்காக தீவிரமாக முயற்சி செய்து வந்தார். அப்போது அமெரிக்கா செல்வதற்கு சர்வதேச ஆங்கில மொழி திறனறி சான்றிதழ் தேவைப்பட்டது. இதை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்தார்.

அதைப் பார்த்த ஒரு மர்ம நபர் ஒருவர், அமெரிக்க அரசின் உயர் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்த சான்றிதழை பெற்றுத்தர உதவுவதாக கூறி, அதற்கு கட்டணமாக தனது வங்கிக்கணக்கில் ரூ.26 ஆயிரம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். அந்த பெண்ணும் பணம் செலுத்தினார்.

பின்னர், ஒவ்வொரு கட்டணத்தின் பெயரை சொல்லி அதற்காக இவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்ல. அந்த இளம்பெண்ணும் கடந்த 3 மாதங்களில் ரூ.8 லட்சத்து 23 ஆயிரம்வரை ஆன்லைனில் அனுப்பி வைத்தார். பிறகு அந்த நபரை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள இயலவில்லை.

அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், நாக்பூர் போலீசில் புகார் செய்தார். மோசடி ஆசாமியின் வங்கிக்கணக்கை அடையாளம் கண்ட போலீசார், அந்த நபர் இந்தியன்தான் என்று கண்டுபிடித்துள்ளனர்.மேலும் அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

CHEATING