‘கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்...’ ‘மாட்டுத்தொழுவத்துல ஒளிஞ்சு இருந்து பார்த்தேன், அப்போ...’ நிலைகுலைய செய்யும் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் அவந்தி பகுதியில் 30 வயதுடைய இளைஞர்,  9 மாத கன்றுக்குட்டியை கற்பழித்த செய்தி அப்பகுதி மக்களை குலைநடுங்க செய்துள்ளது. 

‘கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்...’ ‘மாட்டுத்தொழுவத்துல ஒளிஞ்சு இருந்து பார்த்தேன், அப்போ...’ நிலைகுலைய செய்யும் சம்பவம்...!

தனிநபர் ஒருவர் ஹைதராபாத் மாநிலம், ஹைதர்குடாவின் அவந்தி நகர் பகுதியில் கால்நடைகளுக்கான ஒரு மாட்டு கொட்டகையை நடத்திவந்துள்ளார். அதற்கு காவலாளியாக மகேஷ் என்பவரையும் நியமித்துள்ளார். இரவு நேரங்களில் மட்டும் இந்த தொழுவங்களிலிருந்து வினோதமான சத்தங்களை கன்றுக்குட்டிகள் எழுப்பிக்கொண்டிருக்குமாம். கடந்த சில மாதங்களாகவே இம்மாதிரியான ஓசைகள் கேட்கவே,சந்தேகம் அடைந்த பக்கத்துவீட்டுக்காரர் கடந்த வியாழன் அன்று இரவில் என்ன தான் நடக்கிறது என்று மாட்டு தொழுவத்தில் பின்புறத்தில் மறைந்து கொண்டு கண்காணித்து கொண்டிருந்துள்ளார்.

திடீரென கொட்டகைக்குள் நுழைந்த மகேஷ் அங்கிருந்த 9 மாத கன்றுக்குட்டியை பிடித்து அதனுடன் உடல்ரீதியாக உறவு கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக காவல்துறையினருக்கும், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பி.எஃப்.ஏ) மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் சொசைட்டி ஃபார் தி ப்ரீவென்ஷன் ஆஃப் ப்ரூவென்ஷன் ஆஃப் அனிமல்ஸ் (ஜி.எச்.எஸ்.பி.சி.ஏ) ஆகிய அமைப்புகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த கால்நடை கொட்டகையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல எனவும், சில மாதங்களாவே நடந்து வருகிறது எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தான் கொட்டகை உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியாமல் போனது என்றும் தெரிவித்தார்.

இதை அடுத்து நாராயணகுடா காவல்துறையினர் ஐபிசியின் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) கீழ் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர் காந்தி மருத்துவமனைக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து மருத்துவமனைகளில் இருந்து அறிக்கைகள் கிடைத்த பின்னரே குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்து விசாரிக்க முடியும் என்று காவல் துறை துணை ஆய்வாளர் நாராயணா கூறியுள்ளார்.

CALF