'உங்க ஏரியால கொரோனா இருக்கா...?' 'இனிமேல் வீட்ல உட்கார்ந்துக்கிட்டே தெரிஞ்சுக்கலாம், அதுக்கு...' இந்திய அரசு வெளியிட்டுள்ள வாட்ஸப் நம்பர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்அப் நம்பரை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

'உங்க ஏரியால கொரோனா இருக்கா...?' 'இனிமேல் வீட்ல உட்கார்ந்துக்கிட்டே தெரிஞ்சுக்கலாம், அதுக்கு...' இந்திய அரசு வெளியிட்டுள்ள வாட்ஸப் நம்பர்...!

சமீபகாலமாக அனைவரும் கொரோனா வைரஸ் குறித்த பயத்துடனும், பாதுகாப்பு குறித்தும் கவலை கொள்ள வைத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் பிறந்திருந்தாலும் தற்போது உலகெங்கும் உள்ள மக்களை தலை சுற்ற வைத்துள்ளது.

கோவிட் 19, உலகெங்கிலும் 2,47,488 மக்களை பாதித்துள்ளது. 88,522 மக்கள் இந்த வைரஸின் குரூர பிடியிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். மேலும் 10,110 பேர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் இதுவரை  218 பேர் பாதிப்படைந்துள்ளனர், பலி எண்ணிக்கை 6 ஆக உணர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி பதட்டத்துடன் இருக்கும் மக்களின் சந்தேகங்களை தீர்க்கவும், கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல் பரப்புவதைத் தடுக்கவும் இந்திய அரசாங்கம் ஒரு அதிகாரபூர்வமான Chatboyஐ WhatsApp வழியாக அறிமுகம் செய்துள்ளது.

9013151515  என்ற வாட்ஸ்அப் நம்பரை உங்களின் செல்போனில் சேவ் செய்து கொள்ளவும்.  கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நோக்கத்தின் கீழ் இந்த சாட்பாட் உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த வாட்ஸ்அப் சாட்பாட் ஆனது மைகவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க் (MyGov Corona Helpdesk) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

இதுமட்டும் இல்லாமல் உங்கள் பகுதியில் கொரோனா பரவி உள்ளதா என்பதை வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிக்கவும் இந்திய அரசாங்கம் ஒரு கொரோனா வைரஸ் தேசிய ஹெல்ப்லைன் எண்ணையும் (+ 91-11-23978046 மற்றும் கட்டணமில்லாத எண்ணையும் (1075) மற்றும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியையும் (ncov2019@gov.in) உருவாக்கி உள்ளது.

CORONAVIRUS, HELPLINE